• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட்… அம்மா அமைச்சர் தகவல்!!

Byகாயத்ரி

Aug 29, 2022

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பெண்களின் பயணம் சென்னையில் 69 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டு வராத சிறப்பான திட்டம் ஆகும்.
இலவச பேருந்து பயண திட்டம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாக உள்ளது. அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 பேருந்துகளில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.