அரியலூர் மாவட்டம் தாதன்பேட்டை பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி தென்கச்சி சுவாமிநாதன் நம்மாழ்வார் நினைவாக சனவரி 25 ல் தென்கச்சிப் பெருமாள் நத்தம் கிராமத்தில் முப்பெரும் உழவர் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அறுவடைத்திருவிழா உணவுத்திருவிழா விதை திருவிழா என மூன்று நிகழ்வுகளை செய்திட முப்பெரும் விழாவாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மணப்பாறை மாடுகட்டி மாட்டு வண்டி ஊர்வலம் ஜல்லிக்கட்டு காளை அலங்காரத்துடன் ஊர்வலம் சிலம்பம் பறை இசை பாரம்பரிய பரதம் மாவிலை புங்கன் இலை வாழை குருத்து தென்னை ஓலை ஆவாரம்பூ வேப்பிலை தோரணங்கள் மரபு வகை மரக்கன்றுகள் நடுதல் நம்மாழ்வார் மருதகாசி தென்காசி சுவாமிநாதன் படத்திறப்பு விழா பழையசோறு வழங்கும் அவலில் தயாரிக்கப்பட்ட தேங்காய்ப்பால் மோர் சாதம் சர்க்கரை சாதம் எலுமிச்சை சாதம் காய்கறி கலவை தூயமல்லி அரிசியில் தயாரிக்கப்பட்ட காய்கறி பிரியாணி தயாரிக்கும் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சோ.கண்ணன் கலந்து கொள்ள உள்ளார். 18/01/2025 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்கச்சி கோ சுவாமிநாதன் பேரன் இள. கலைச்செல்வன் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் திருவள்ளுவர் ஞானமன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராவணன் கருக்கை பழனிச்சாமி கடலூர் மாவட்ட முருகன்குடி முருகன் கரடிக்குளம் இயற்கை உழவர் பார்த்திபன் கோவிந்தபுத்தூர் பாலசுப்பிரமணியன் முட்டுவாஞ்சேரி தனாதிபதி வெற்றிகொண்ட சோழபுரம் சுந்தரேசன் கல்லாத்தூர் மேலூர் சந்திரசேகர் தென்கச்சி முருகுபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக தென்கச்சி மேகநாதன் நன்றியுரை கூறினார்.





