• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

BySeenu

Jun 7, 2025

பக்ரீத் பண்டிகை ஒட்டி கோவையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையை தொழுதனர். மேலும் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தி சொற்பொழிவு நடத்தினர்.

மேலும் இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு தொழுகையில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் , தனது மகனை இறைவனுக்காக பலியிட முன் வந்த தியாகத்தை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த தொழுகையின் போது புத்தாடை அணிந்து ,
ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆடு,மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து குர்பானி கொடுக்கும் நிகழ்வும் இன்று நடத்தப்படுகிறது. ஆடு,மாடு போன்றவற்றை பலியிட்டு அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழை, எளியவர்களுக்கும்,3-வது பங்கை தங்களுக்கும் என பகிர்ந்து , இறைச்சியினை உண்டு மகிழ்ந்து உற்சாகமாக பக்ரீத் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அத்தார் ஜமாத்பள்ளியின் தலைவர் பேராசிரியர்  Dr.A.பீர் முஹம்மது
ME.,MBA., Ph.D.மற்றும் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் நவாஸ், முகமது அன்சர்,
செயலாளர்B.பக்கீர் முகமது, பொருளாளர் M.I ஆசிக்  அகமது, முத்தவல்லி S ஜாபர் அலி, தலைமை இமாம் இப்ராகிம் பாகவி, துணை இமாம் அசரப் அலி,மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஜியாவுர் ரஹ்மான், ஹனிபா, S. அஸாருதீன், A.S. ஷக்கில் அகமது,
J. அசன் முகமது, S. முகமது யூசுப், A. முகமது சாதிக், A..R சாதிக் பாஷா,
B. அபூபக்கர் சித்தீக் மற்றும் மகாசபையாளர்கள் ஜமாத் உறுப்பினர்கள்
ஆகியோர் கலந்து கெண்டனர்.