இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது.

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடத்திய பிறகு இந்தியாவின் பல நகரங்களை தாக்குவதற்கு பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் மேன்மைமிகு ராணுவ படைகளுக்கு நமக்காக எல்லையில் போர் புரியும் நம் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும் வெற்றி பெறவும் வேண்டி திருக்கோயில்கள் தேவாலயங்கள் மசூதிகள் உள்ளிட்ட தமிழக முழுவதும் 82 மாவட்டங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நத்தம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் நத்தம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்.
பின்னர் நத்தம் பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான விழாவை துவக்கி வைத்து 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானங்களை வழங்கினார். இதில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.