• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இந்த செயலை பாராட்டியே ஆக வேண்டும்

ByKalamegam Viswanathan

Nov 24, 2024

விஷம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்த நபரை 108 அவசர கால ஊர்தி ஊழியர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதி.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே நிலையத்தில் இன்று மாலை ஒருவர் விஷம் அருந்தி மயக்க நிலையில் கிடப்பதாக 108 அவசர கால ஊறுதி அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பரங்குன்றம் 108 அவசர கால ஊர்தி ஓட்டுனர் ஹரி விக்னேஷ் மற்றும் மருத்துவ உதவியாளர் அன்புச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வாகனம் உள்ளே செல்ல முடியாததால் வாகனத்தில் சாலையிலே ஓரத்தில் நிறுத்தி ஒரு கிலோமீட்டர் ஸ்ட்ரக்சர் எடுத்துச் சென்று அங்கிருந்து மயங்கிய நிலையில் இருந்த நபரை தூக்கிக்கொண்டு மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அனுமதித்தனர் சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலா வயது 45 இவர் சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்று தெரிய வருகிறது திருப்பரங்குன்றம் முதல் உறுதி அளித்தபின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இவரை அனுப்பி வைத்த மருத்துவமனை சுமார் ஒரு கிலோமீட்டருக்கு மேல் 108 அவசர கால பணியாளர்கள் விஷம் வருந்தி ஆபத்தான அவரை தூக்கி வந்தது அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.