• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம்…

Byகாயத்ரி

Jun 8, 2022

மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது, தெய்வானை யை முருகன் திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள சரவணப்பொய்கை புனித தீர்த்தமாகப் போற்றப்படுகின்றது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.

லிங்க வடிவில் மலை

திருப்பரங்குன்றம், லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவ சக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார். இக்குன்று சிவலிங்க வடி விலேயே காணப்படுவதால் சிவபெருமா னே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது.

இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டரா கும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெ ல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

தல அருமை

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஓம் எனும் பிரணவ (பரம்பொரு ளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார்.

முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தி னையும் அதன் உட்பொருளையும் பிரம்ம தேவனுக்கு உபதேசித்தபோதிலும், சிவ பெருமானும், முருகப் பெருமானும் ஒருவ ரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்துக்கு ப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப் பரங்குன்றத்துக்கு வந்து தவம் செய்தார். இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானு க்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள்.

சிவபெருமான் – பார்வதி தேவி, இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடைநாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப் பெருமா னும் அந்த உபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்துகொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்துகொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

எனவே, திருப்பரங்குன்றம் முருகப்பெரு மான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய த்துக்குச் சென்று வழிபடுதல் நல்லது.

முருகப் பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெ ருமானையும், முருகக் கடவுளையும் வழிப டுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறு வார்கள் என்று கூறப்படுகிறது. அதனால், திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப் பெருமான் அவதாரம்செய்து சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொ டியாகவும் ஏற்றுக்கொண்டு அருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள்.

முருகப் பெருமானுக்கு தன்னுடைய நன்றி யைச் செலுத்தும் வகையில், தேவர்களின் தலைவனான இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி, முருகன் – தெய்வயானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்துக் கொடுக்க, முருகப் பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்ற புராணம் கூறுகிறது.

பெயர்க்காரணம்

பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம். திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம்பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடை மொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றி ன் உருவில் காட்சியளிப்பதாக எல்லோரா லும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலை யை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்து விடும் என்று திருஞானசம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

இத்திருத்தலத்துக்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங் குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசின ம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சிறப்புகள்

முருகப் பெருமானின் அறுபடை வீடு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.

லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூ ர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெரு மான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.

சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக்கொண்டார்.

கோயில் அமைப்பு

இக்கோயிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது.

இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிக ள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதக. னம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவ சேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனா தேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத் தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.

கல்யாண மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்குப் பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திரு ந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது.

இக்கத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது. இத்தீர்த்த நீரே கன்றிலுறை குமரன் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

கல்யாண மண்டபத்தை அடுத்துக் கொடி மர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாக னங்களும் உள்ளன. இது இத்தலத்தின் சிறப்பாகும்.

கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டப ம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலு ம் இரட்டை விநாயகர், நந்திதேவர் காண ப்படுகின்றனர். மகாமண்டபத்தில் சோமா ஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீர ர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோயில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப் பெருமானுக்கும், அருண கிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசு வரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன

மகாமண்டபத்திலிருந்து மலையை குடை ந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன. அர்த்த மண்ட பத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சர படிகள் என்று கூறப்படுகின்றன.

கருவறையில் ஒரு பெரிய பாறை. அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினி யின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத் தில் மூலவரான முருகப்பெருமான் திரும ணக்கோலம் கொண்டுகாட்சி தருகின்றார் மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவ மும் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூலவரான முருகப்பெருமானது திருவடி. யின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளா கிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவ ங்களும், காவல் தேவதைகளின் உருவங் களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன. இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமி ல்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர்.

மூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலை யைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலி ல் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகால க்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சிய ளிக்கிறார். இக்கோயிலின் வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன

கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடை வரைக் கோயில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார். மூலவர் திருமணக் கோலங்கொண்ட முரு கன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங் களும் சூழ காட்சி தருகின்றார். இப்பெரு மானின் திருமணச் சடங்குக்கு அனைத்து தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன என கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட் டுள்ளது.

பரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இதை முருகன் தம் வேலினால் உண்டாக் கினார் எனக் கூறுவர்.

திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர். இத்தெ ன்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோ யில் என்று வழங்கப்படுகின்ற குடைவரை க் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல உள்ளன.

இதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக் கை எனப்படும் குகை ஒன்று உள்ளது. இக் குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் சுனை ஆகியவை உள்ளன.

அமைவிடம்

தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கும் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே ஒன்பது கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திரு ப்பரங்குன்றம் கோயிலுக்கு நகரப் பேருந் துகள் அதிக அளவில் செல்கின்றன. பேரு ந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலா ம். மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெ ல்வேலி செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையமும் அமைந்துள்ளது.