தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில்குமரி மாவட்டத்தில் திருக்குறள் மாணவர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது இதை ஒட்டி இன்று திருக்குறள் மாணவர் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை தாங்கினார், இந்த மாநாட்டில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

சென்னை மாநகராட்சி இணை ஆணையர், திருக்குறள் பணிகள் சிறப்பு அலுவலர் ஜெயசீலன் ஐ. ஏ. ஏஸ், பள்ளி கல்வித்துறை இயக்குநர் முனைவர் கண்ணப்பன், இணை இயக்குனர் சுவாமிநாதன், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தண்டபாணி வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், நிஷாந்த் கிருஷ்ணா,
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் திருக்குறள் விவாத மேடை, கலை நிகழ்ச்சிகள், வினாடி வினா, கவிதை போட்டி, பேச்சு போட்டி, குழு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 38 மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர்.






