• Mon. Jun 17th, 2024

கோவை வேலாண்டிபாளையம் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்

BySeenu

May 26, 2024

கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 28 ஆம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமம்,கம்பம் நடுதலுடன் துவங்கியது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும், காலை, மாலை என கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளாக,மாவிளக்கு பூஜை,பொங்கல் பூஜைபளுடன் தீபாரதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கோவில் தர்மகர்த்தா டாக்டர் சிவராமன் மற்றும் குடும்பத்தினர் சார்பாக நடைபெற்ற அம்மன் திருக்கல்யாண, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மணக்கோலத்தில், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெற்றது. மேலும் விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் மற்றும் புடவைகள் (SAREES) வழங்கப்பட்டது.இதில் கோவில் நிர்வாகிகள் தலைவர் ராமன் செயலாளர் எஸ் ஆர் பி பாண்டிமுத்து பொருளாளர் தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சுப்பையா ராஜன், கருப்பையா சேகர், செந்தில்குமார், ஆதித்தன் என்ற ராஜா, சரவணன், சுப்பையா, செந்தில்குமார் மற்றும் கோவில் செயற்குழு நிர்வாகிகள் தலைவர் காளிமுத்து,செயலாளர் கோவிந்தன், பொருலாளர் மணிகண்டன், சக்திவேல்,மணி,பாலாஜி,கோபாலகிருஷ்ணன், தவசிமுருகேசன்,தினேஷ்குமார், சதிஷ்குமார்,விஜயகாந்த் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *