• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

“இன்னும் ஒரே மாதத்தில் அனைவருக்கும் வளமான வாழ்வு இருக்கிறது”-சி.விஜயபாஸ்கர் பேச்சு..,

Byமுகமதி

Mar 8, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி விராலிமலை கிழக்கு, வடக்கு மற்றும் குன்றாண்டார்கோவில் மேற்கு கழகங்களின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் அஇஅதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கூட்டணிக் கட்சியினர் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றனர்

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்….

“அதிமுகவினருக்கு தப்பான பாதை தெரியாது. ஆனால் திமுகவிற்கு தப்பான தவறான பாதைதான் தெரியும். ஒரே மாதத்தில் நம் எல்லோருக்கும் வளமான வாழ்வு உள்ளது. அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி உள்ளது. 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று நமது பொதுச் செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

தாலிக்குத் தங்கமும் கிடைக்கும். குறைந்த விலையில் தக்காளியும் கிடைக்கும். அனைத்து விலையும் திமுக ஆட்சியில் உயர்ந்துவிட்டது. இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சொன்னால் ஆட்சி மாற்றம் வேண்டும். அதைச் செய்வதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.

இவ்வளவு காலம் விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருந்துவிட்டு ஒரு நாள் விடியல் காலையில் 5 ஆயிரம் ரூபாய் போடுவது சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதற்காக… பணம் கொடுத்தா வாங்கி வச்சுக்கோங்க. ஓட்ட மட்டும் இரட்டை இலைக்கு போடுங்க. இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.

அதிமுகவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் 10 வேட்டி பத்து சட்டை பத்து புடவை இப்பொழுதே சலவைக்கு போட்டு தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கோட்டைக்குப் போவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் மாவட்டக் கழக அவைத்தலைவர் ராமசாமி, பிஜேபி மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், த.மா.க மாவட்டத் தலைவர் தமிழரசன், ஐஜேகே மாவட்டச் செயலாளர் சீனிவாசன், ஒன்றியச் செயலாளர்கள் திருமூர்த்தி, AVR.ராஜேந்திரன், ராமநாதன், நாகராஜ், முத்தமிழ் செல்வன் மற்றும் மாநில நிர்வாகிகள் MTR.தமிழரசன், பாறை சிவா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், நார்த்தாமலை ஆறுமுகம், ராஜு மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சுமன் காளிதாஸ், ராஜா மரியதாஸ், IT WING ரஞ்சித்குமார், மகளிரனி அன்னலட்சுமி, டாக்டர்.சரத்குமார், திருச்சி மண்டலச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட விராலிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.