• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை: நடிகர் ரஜினி பரபரப்பு பேச்சு..!

Byவிஷா

Jul 23, 2022

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பணம், பெயர், புகழ் என எல்லாம் இருந்தும் நிம்மதி மட்டும் இல்லை எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த விழா நேற்றைய இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்..,
“யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை. பாபா படம் வந்த பின்னரே பாபாவைப் பற்றி பலருக்கும் தெரிந்தது. ரசிகர்கள் இருவர் சன்னியாசி ஆனது மகிழ்ச்சி. இமயமலை சொர்க்கம் போல் காட்சியளிக்கும்; மூலிகையைச் சாப்பிட்டால் ஒரு வாரம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
இமயமலையில் உள்ள சித்தர்களுக்கு அசாத்திய சக்தி உண்டு. எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்திக் கொடுத்தது ஸ்ரீராகவேந்திரர், பாபா படங்கள்தான். கடைசி காலத்தில் நோய் இருக்கக் கூடாது; உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பை விடவும், வயது முதிர்ந்த பின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சொத்துகளை விட்டுச் செல்வதை விடவும், நோயாளியாக இருந்திடக் கூடாது. இது அனைவருக்கும் துன்பம். அதேபோல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும். மனிதர்கள் கடந்த காலங்களையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வர். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. வலிகளில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும்.

வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. உலகத்தில் எல்லா கடவுள்களும் இருக்கிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.