புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளரிடம் கூறுகையில்,
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு தான் இந்தியா.
அதனை நயினார் புரிந்து கொள்ள வேண்டும்,

திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது
இந்தியாவில் உள்ள இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் தமிழக இந்துக்கள்,

திருப்பரங்குன்றம் விவகாரம் ஒரு சதவீதம் கூட திமுக அரசுக்கு பின்னடைவு கிடையாது
நான் என்ன தவறுதலாக சொன்னேன் என்ன தீர்ப்பு அன்று சொல்லப்பட்டது என்பதை அண்ணாமலை சொல்ல வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் சொல்லப்பட்ட தீர்ப்பை தான் நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். தீர்ப்பை மாற்றி சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
வழக்கு தொடர்வதற்கான அருகதை கூட அவர்களுக்கு இல்லை.
செல்லூர் ராஜூ வை போல் ஒரு ஜோக்கர் வேரு யாரும் இல்லை,அவர் அமைச்சராக இருக்கும்போது அவரது அமைச்சரவை ஒரு முடிவை எடுக்கிறது அவரது ஆட்சியில் ஒரு தீர்ப்பு வருகிறது அந்த தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் செயல்பட மாட்டோம் நட்புக்காக கொத்தடிமையாக நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று அவர் கூறினார் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை தமிழக மக்கள் அவர்களை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
சட்டத்தை நாங்கள் மதிப்பவர்கள்,ஏற்கனவே கொடுத்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்,எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்-
பாஜகவின் மாயாஜால வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது.
திருப்பரங்குன்றம் விவாகத்தில் தமிழர்கள் எது சரி எது தவறு என்பதை உணர்ந்து செயல்படுவார்கள்.




