• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது..

Byகாயத்ரி

Nov 19, 2021

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால், இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, வகுப்புகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் முழுமையாக கல்வி கற்க இயலாத நிலை உள்ளது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக மே மாதம் பொதுத் தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது