ராமநாதபுரம் ரயில்வே தூக்கு பாலத்தில் எந்த பழுதும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி யாரும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை, நேரம் கொடுக்கவும் இல்லை என சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த தூக்கு பாலம் பழுது அடைந்திருந்ததா என்பது குறித்து, மதுரையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அது குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்பட்ட போதும், பழுது ஆனதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அது குறித்து அமைச்சரிடம் கேட்ட போது, அப்படி எதுவும் பழுதாகவில்லை.
தூக்குப்பாலம் எப்படி வடிவமைக்கபட்டுள்ளது என்றால் ரயில் கடந்து சென்ற பிறகு பாலம் மேலே செல்கிறது. ரயில் முழுவதுமாக கடந்து கடைசிக்கு சென்ற பிறகுதான் மறுபடியும் அதை இயக்க முடியும் அப்படிதான் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்களா என்பது குறித்து கேட்ட பொழுது..,
அது யூகத்தின் அடிப்படையில் வெளியான தகவல் தான். அப்படி எதுவும் அனுமதி கேட்கவில்லை, அனுமதி கொடுக்கப்படவும் இல்லை எனக் கூறி புறப்பட்டு சென்றார்.