• Sat. Jan 31st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா..,

ByKalamegam Viswanathan

Jan 31, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கோயில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சியினையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெற்றன.

இதில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்ட நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் சொக்கநாதருடன் சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளி கதிர் அறுப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

சிந்தாமணியில் நடைபெறும் கதிர் அறுப்பு திருவிழா நிகழ்ச்சிக்காக மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பிரியாவிடை ஆகியோர் பல்லாக்கு வாகனத்தில் கோவிலில் இருந்து கீழமாசி விதி விளக்குத்தூண் வழியாக சிந்தாமணி கிராமத்தை அடைந்தனர்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் வருகையொட்டி வழியெங்கும் திருக்கண் மண்டகப்படி அமைத்து மீனாட்சி சொக்கநாதர் வரவேற்றனர்.

சிந்தாமணியில் உள்ள பழமை வாய்ந்த கதிர் இருப்பு மண்டபத்தில் எழுந்தருளி அங்கு அமைக்கப்பட்டிருந்த நெற் கதிர்களை மீனாட்சி சொக்கநாதர் கதிர் அறுப்பு செய்யும் நிகழ்ச்சியில் ஆண்டாஆண்டு காலம் ஆக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து சிந்தாமணி சாமநத்தம் வில்லாபுரம் அவனியாபுரம் பனையூர் விரகனூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்