மனநலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனுடைய வசிக்கும் வயதான முதியவரின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வதாக, பழனி செட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் குடியிருந்து வரும் மாயாண்டி (லேட்) மனைவி சீனியம்மாள் (85) தன்னுடைய மகன் மனநலம் பாதிக்கப்பட்ட ஞானசேகரன் (52) உடன் பல வருடங்களுக்கு வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இவருடைய சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலர்கள் சீனியம்மாள் வீட்டிற்கு சென்று கழிவுநீர் குழாய் மற்றும் குடிநீர் குழாய்களை உடைத்து விட்டனர்.
இதுகுறித்து சீனியம்மாள் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது மீண்டும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு கழிவுநீர் குழாய் பதிக்கவும் குடிநீர் குழாய் உள்ளிட்டவைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என பழனி செட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சீனியம்மாள் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் குழாய் இணைப்பு இல்லாத காரணத்தால் வீட்டில் குடியிருக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதாக சினியம்மாள் மனநல பாதிக்கப்பட்ட மகனுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.