தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் டிப்பர் லாரிகளில் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதால் விரைவில் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு வருகின்றனர்,
தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம் போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய மூன்று வழித்தடங்களிலும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் 24 மணி நேரமும் கேரள மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
குறிப்பாக மண், மணல், ஜல்லிக்கட்டு, உடை கற்கள், எம் சாண்ட், பீ சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் தினதோறும் தேனி மாவட்டத்தில் உள்ள மூன்று வழித்தடங்களிலும் எடுத்துச் செல்லப்படுகிறது.
எனவே கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கடத்துவதை தடுக்க தேனி மாவட்ட நிர்வாகமும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





