• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

“ரூ.20,000 மதிப்புள்ள நாய், பூனை திருட்டு”..,

BySeenu

Aug 27, 2026

கோவை, தடாகம் சாலையில் உள்ள வளர்ப்புப் பிராணிகள் விற்பனை நிலையத்தில் (Pet Shop) மர்ம நபர்கள் இருவர் புகுந்து, ரூபாய் 20,000 மதிப்பிலான நாய் மற்றும் பூனையை நைஸாகத் திருடிச் செல்லும் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை, தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் பெட் ஷாப் ஒன்றிற்கு பிற்பகல் வேளையில் இரண்டு வாலிபர்கள் வந்து உள்ளனர். கடையில் உரிமையாளரின் கவனம் குறைந்த நேரத்தைப் பயன்படுத்திய அந்த நபர்கள், அங்கு வைக்கப்பட்டு இருந்த ₹15,000 மதிப்புள்ள நாய் மற்றும் ₹5,000 மதிப்புள்ள பூனை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடி உள்ளனர்.

வாலிபர்கள் இருவரும் வளர்ப்புப் பிராணிகளைத் தூக்கிக் கொண்டு நைஸாக நழுவும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் துல்லியமாகப் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் திருட்டு சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் எந்தவிதப் புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்து உள்ள கடை உரிமையாளர், “காவல்துறை வழக்கு, விசாரணை எதுவும் எனக்கு வேண்டாம். திருடிச் செல்லப்பட்ட எனது செல்ல நாய் மற்றும் பூனை பத்திரமாகக் கிடைத்தால் மட்டுமே போதும்” என உருக்கமான பதிவொன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

​உரிமையாளரின் இந்த உருக்கமான வேண்டுகோளைத் தொடர்ந்து, அந்த சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.