• Fri. May 3rd, 2024

வாலாந்தூரில் ரயில்வே கிராசிங் பாலம் அமைக்கக் கோரி.., மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்..!

Byகுமார்

Jan 9, 2024

ரயில்வே கிராசிங் பாலம் இல்லாததால் எங்க ஊர் பசங்களுக்கும், பெண்களுக்கும் பெண் தரவும் மாட்றாங்க, பெண் எடுக்கவும் மாட்றாங்க அடிப்படை வசதிகள் கிடைக்காத சிரமத்திற்கு ஆளாகியிருக்கோம் என வாலாந்தூர் பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாலாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாலாந்தூர் பகுதியில் உள்ள பழைய இரயில்வே ஸ்டேசன் வழியாக சக்கிலியங்குளம், வின்னகுடி, வீரபாண்டி, கொடிக்குளம், ஒய்யண்டாபட்டி, பாண்டியன் நகர், கல்கொண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கான கிராசிங் பாலம் இல்லாத நிலையில் அப்பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவரும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த கிராமங்களுக்கு பேருந்துகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருகின்றது. மேலும் மின்சார கட்டண மையம், காவல்நிலையம், தபால்நிலையம், வங்கி, கல்லூரி, பள்ளி குறிப்பாக விவசாயப் பணிகள் கரும்பு, நெல் சாகுபடி பொருள்களை தேனி மெயின் சாலைக்கு கொண்டு செல்வதற்கு கடும் சிரமத்துடன் 5 கிலோ மீட்டர் வரை சுற்றி வரும் நிலை உருவாகின்றது.
மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆளுயர அளவிற்கு தண்டவாளத்தில் கற்கள் இருப்பதால் அதனை கடந்துசெல்லும் போது முதியவர்கள தடுமாறி கீழே விழும் நிலை உருவாகின்றது. எனவே அந்த பகுதியில் ஒரு சிறியபாலம் அல்லது லெவல் கிராஸ்ஸிங் அமைத்து தரக்கோரி நீண்ட காலங்களாக அப்பகுதி பொதுமக்கள் போராடிவருகின்றனர். பலமுறை கிராம சபை கூட்டங்கள் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கை விடுத்தார் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் இஅன்று மீண்டும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இரயில்வே கிராஸ்ஸிங் பாலம் அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய அக்கிராமத்தை மூதாட்டி ஒருவர் பேசியபோது..,
ரயில்வே கிராசிங பாலம் இல்லாத நிலையில் எங்கள் கிராமத்திற்கு யாரும் வருவதே இல்லை, எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் யாரும் பொன்னு தரவும்மாட்றாங்க பொன்னு எடுக்கவும் மாட்றாங்க எந்த வசதியும் இல்லா வாழ்ந்து வர்றோம் என கூறிவிட்டு 30 குலசாமிகளின் பெயர்களை வரிசையாக அடுக்கி குஷ்பு பட ஸ்டைலில் மளமளவென கூறி நல்லா இருப்பீங்க ரயில்வே கிராசிங் ஏற்பாடு பண்ணுங்க என கோரிக்கை விடுத்தார்.. இதனை தொடர்ந்து பேசிய பெண்கள் அரசு எங்களுக்கு ரயில்வே கிராசிங் அல்லது மேம்பாலம் கட்டித்ததராவிட்டால் அரசின் சலுகைகள் வேண்டாம் உன் கூறி அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து தேர்தலில் ஓட்டு போட மாட்டோம் என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *