• Sun. May 19th, 2024

பாஜகவினரை பார்த்து பயந்து நடுங்கும் விடியா அரசின் காவல்துறை.

BySeenu

Apr 5, 2024

அதிமுக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தலைமையில் கழக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உட்பட கழக தொண்டர்கள் கோவை தொட்டி பாளையத்தில் சாலை மறியல்.

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் தங்களுக்கு காவல்துறை அனுமதித்த நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதே பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய மதியம் 12:30 மணியளவில் காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில், மலை 7 மணிக்கு அத்துமீறி அப்பகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்தார். இந்த நிலையில் அங்கு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை தடுத்து நிறுத்தி பாஜகவின் மீது பயந்து நடுங்கும் விடியா அரசின் காவல்துறை
தாமதமாக பிரச்சாரத்துக்கு பாஜக வேட்பாளர் அண்ணாமலையை முதலில் பிரச்சாரம் செய்ய அனுமதித்தனர். அப்போது அதிமுகவின் பிரச்சார வாகனத்தை பாஜக பிரச்சார வாகனம் ஒன்று உரசி விட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து அப்பகுதியில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாங்கள் சரியான நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாகவும், பாஜக தரப்பு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு விடியா திமுக அரசின் காவல்துறை அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். அதைதொடர்ந்து பொதுமக்கள் அண்ணாமலையின் வாகனத்தை சிறைபிடித்ததை தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த விடியா திமுக அரசின் காவல்துறையினர் வேறு வழியின்றி இரு தரப்பையும் சமாதானம் செய்து முதலில் அதிமுக வேட்பாளரை பிரச்சாரம் செய்ய அனுமதித்தனர். அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட நிலையில், பொதுமக்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைபிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *