• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வேகமாக வந்த ரயில்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த நபர்..

Byகாயத்ரி

Feb 15, 2022

மும்பையில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது இருபக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், விதிகளை மீறி கதவுகளுக்குள் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரின் மோட்டார் சைக்கிள் ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது.ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது பைக் மோதி நொறுங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த 12-ம் தேதி மும்பையில் இந்த வீடியோ காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில், அவசரமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பைக் ஓட்டுநர் ரயில் நெருங்கி வருவதைப் பார்த்து கடைசி நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடுகிறார், இந்த சம்பவத்தில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, “இந்தியாவில் உள்ள அனைத்து பொறுமையிழந்த ஓட்டுநர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்களிடம் தினமும் இதுபோன்ற வீடியோக்களை காண்பிக்க வேண்டும்.

இதுபோல அனைத்து ரயில்வே கிராசிங்களிலும் தடைகளைத் தாண்டிச் செல்லும் குற்றவாளிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.