• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பத்தாயிரம் பணத்தை திருடிய திருடன்..,

ByKalamegam Viswanathan

Apr 5, 2025

திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்தவர் வேல்முருகன் வயது (52) இவர் தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் பார்த்து வருகிறார். இவர் தினந்தோறும் தனது வீட்டிலிருந்து தள்ளு வண்டியில் கடலையை திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து விட்டு பின்னர் வீடு திரும்புவார். இந்த நிலையில் கடந்த (31.3.25) அன்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு தனக்கு தெரிந்த நபரிடம் பண தேவைக்காக பத்தாயிரம் ரூபாய் தவணையாக பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் தான் திருமங்கலம் கற்பக நகர் ராகாஷ் ரெஸ்டாரண்ட் அருகே உள்ள தண்ணீர் குழாயில் வழக்கம்போல் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார் இதனை நோட்டமிட்ட திருடன் வேல்முருகன் தவணைக்காக வாங்கி வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை கல்லாப்பெட்டியுடன் திருடி சென்றான். பணத்தை எடுத்துக்கொண்டு கல்லாப்பெட்டியை அருகில் உள்ள துணிக்கடை அருகே போட்டுவிட்டு சென்றுள்ளான்.

பாத்திரத்தை கழுவி விட்டு திரும்பி வந்த பார்த்த வேல்முருகன் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த திருமங்கலம் டவுன் போலீசார் திருடன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் ஏற்கனவே ஒரு முறை வேல்முருகன் வியாபாரம் முடித்து வீடு திரும்பும் போது 500 ரூபாய் பணத்தை கல்லாப்பெட்டியுடன் தூக்கிச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்பவரை பின்தொடர்ந்து வந்து கல்லாப்பெட்டியுடன் பத்தாயிரம் பணத்தை தூக்கிச் சென்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.