• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காணாமல் போன குழந்தைகளை மீட்ட காவல் கண்காணிப்பாளர்..,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவில் காணாமல் போன 12 குழந்தைகள் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று சூரசம்காரம் நிகழ்வும்  காப்பு தரித்தல் நிகழ்வும் நடைபெற்றது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த நிலையில் அங்கு காணாமல் போன குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க உதவும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பின்படி Project Guardian எனும் புதிய செயலி காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டது.

இந்த செயலியை கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 9 காவல் உதவி மையம் காணாமல் போன குழந்தைகளை மீட்கும் காவல் குழுவினரிடமோ புகார் அளித்து மேற்படி குழந்தை குறித்து தகவல்களை கூறினால் உடனடியாக ஏற்கனவே காணாமல் போன குழந்தைகள் குறித்த பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்து மேற்படி அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்படி செயலியின் மூலம் மொத்தம் 12 காணாமல் போன குழந்தைகள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் Project Guardian செயலியை காவல்துறையினருடன் இணைந்து உருவாக்க உதவிய கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.”. எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமையொருபாகம் மற்றும் போலீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி. சேவியர் ஆகியோர் பாராட்டினார்கள். மேலும்,  தசரா திருவிழா விழாவில் உலகத்தில் நம்பர் 1 எனவும் உளவுத்துறை போலீசார் மத்தியில் பேச்சாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..