• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அரசு போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது..,

BySeenu

Apr 12, 2025

கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 13 புதிய அரசு பஸ்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைவழங்கும் விழா நடந்தது.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர்;-

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள் பொதுமக்கள் பஸ்ஸில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் அரசு பஸ் மூலம், பண்டிகை காலங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்து கழகம் பெற்று உள்ளது. இதற்கு இடையே போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதத்தையும் பரப்புகிறார்கள். அவ்வாறு ஒரு நளும் நடைபெறாது அரசு போக்குவரத்து கழகத்திற்கு 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடியல் திட்டத்திற்கும், மாணவ – மாணவிகளின் இலவச வாழ்த்துக்கள் போதிய நிதிகளை ஒதுக்கி சிறப்பாக செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்பு பழைய பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 11000 புதிய பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் நலிவடைந்த நிலையில் இருந்த அரசு போக்குவரத்து கழகம் இன்று புத்துயிர் பற்றி வருகிறது. எனவே தனியார் மையம் என்ற தகவல் தவறானது. இப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களும் நடத்துனர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு உயர பிரச்சனை காரணம் ஏற்பட்டபோது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 10 சென்டி மீட்டர் உயரத்தை குறைத்து அவர்களும் பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினார். எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் செல்வம், மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, ஏர்போர்ட் ராஜேந்திரன், எல்பிஎப் மண்டல தலைவர் பெரியசாமி, பொருளாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.