• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சொந்த வீட்டில் திருடிய மகன் … போலீசாரிடம் புகார் கொடுத்த தாய் !!!

By

Aug 29, 2021 , ,

கள்ளகுறிச்சி மாவட்டம் வெங்கடாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாவித்திரி இரவு வீட்டில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் மேல் கூரை ஓடு பிரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிலிருந்த பீரோவும் திறக்கப்பட்டிருந்தது.

பீரோவைச் சோதனை செய்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த 3 லட்சத்து 90 ரூபாய் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சாவித்திரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சாவித்திரியின் இரண்டாவது மகன் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

பின்னர், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் கூரையைப் பிரித்து பணம் திருடியதாக ஒப்புக்கொண்டார். இதைக் கேட்டு போலீஸாரும், அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, போலிஸார் ஆனந்தராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.