மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் கார்த்திக் என்பவர் இன்று தனது வீட்டின் சமையலறையில் இரவு உணவிற்காக தோசை உற்றுவதற்காக சென்று உள்ளார். அப்போது அவரது கேஸ் அடுப்பு அடியில் உஸ் உஸ் என்று சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்து கீழே குனிந்து பார்த்தபோது அடுப்புக்கு அடியில் கதகதப்பாக பாம்பு ஒன்று படுத்து கிடப்பதை பார்த்து மிரண்டு போய் உடனே அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து, பின்னர் திருநகரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுக்கு தகவல் தெரிவித்தனர். விரைவில் வந்த பாபு கேஸ் அடுப்பின் அடியில் இருந்த மூன்று அடி நீள சாரைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார்.
வீட்டின் சமையலறைக்கு இரவு உணவு சமைப்பதற்காக அடுப்பின் அருகில் சென்ற போது அடிப்பின் அடியில் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.