கரூர் மாவட்டத்தில் அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 கான தேர்வு மாவட்டம் முழுவதும் 65 மையங்களில் நடைபெறுகிறது.

தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கு தேர்வர்கள் வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் ஒன்பது மணி வரை தேர்வர்கள் தங்களுக்குரிய ஹால் டிக்கட், மற்றும் அடையாள அட்டையுடன் தேர்வு எழுத வந்தனர்.
ஒன்பது மணிக்கு பிறகு தேர்வு வளாக கதவுகள் பூட்டப்பட்டன. ஒரு சில இடங்களில் சற்று தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க மறுக்கப்பட்டதால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
கரூர் மாவட்ட முழுவதும் 18,030 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
