• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பல்லடத்தில் முதல் கணவனுடன் பேசியதால் இரண்டாவது கணவன் ஆத்திரம்…மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய இரண்டாவது கணவனை கைது செய்த போலீசார்…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ஹசீனா30. அபூதகீர் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது மேலும் அதனைத் தொடர்ந்து ஹசீனாவிற்கு குமார் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு ஹசீனா குமாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் குமார் மது போதையில் ஹாசீனா-விடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குமார் பிளேடால் ஹசினாவின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஹசினாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் , அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஹசீனா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் வழக்கம்போல் மங்கலம் சாலையில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த குமாரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இதுகுறித்து குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஹசீனா இரண்டு வாரங்களாக முதல் கணவனான அபுதா கீரிடம் பேசி வந்ததாகவும், இதனை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஹசீனாவின் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பல்லடம் அருகே முதல் கணவருடன் பேசியதால் ஆத்திரமடைந்த இரண்டாவது கணவர் மனைவியின் கழுத்தை பிளேடு ஆள் அறுத்து சிறைக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.