குமரி மாவட்டத்தில் அண்மை காலமாக ஆளும் கட்சி, எதிர் கட்சிகளின் சொந்த கட்சிக்குள் நடக்கும் “சடுகுடு”விளையாட்டு அதிரடி மாற்றங்களை பார்த்து ஆச்சரியம் இல்லாத ரசனையுடன் குமரி மக்கள் பார்த்து ரசிக்கும் காட்சியில், அதிமுக செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆடும் ஆட்டம் அட்டகாசம்.
ஜெயலலிதா எந்த பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவித்தவர் மறைந்த சில நாட்களில், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் போட்ட சண்டை, அடுத்த சில நாட்களில் அன்றைய தமிழக ஆளுநர் இபிஎஸ், ஈபிஸ்,கைகளை இணைந்து வைத்து சமாதான ஒப்பந்தம் போட்டது முதல். அதிமுகவில் உள்ள பலர் பாஜக விடம் அவர்களது தனிப்பட்ட நட்பை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் வலுப்படுத்திய கூட்டத்தில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் தலைமை நிர்வாகி ராதாகிருஷ்ணன் இடையே உள்ள நெருங்கிய நட்பு. தளவாய்சுந்தரத்திற்கு டெல்லி பாஜகவுடன் நெருங்கிய நட்பு பாலத்தை உருவாக்கிக் கொடுத்தது.
விவேகானந்த கேந்திரவிற்கு எந்த முக்கிய வி வி ஐ பி வந்தாலும். தளவாய் சுந்தரத்திற்கு அழைப்பும், அனுமதியும் உண்டு. இந்த நட்பால் தான். குமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் முதல் பூதப்பாண்டி வரையிலான ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் காவி கொடி அசைத்து முதல் முறையாக தொடங்கி வைத்தார்.
தளவாய் சுந்தரம் கடந்த 8ம் தேதி தலைமை கழகத்தின் உத்தரவு படி நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று விட்டு. குமரி கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகம் சென்று அமர்ந்த அடுத்த நொடி பொதுச்செயலாளர் இடம் இருந்து. தளவாய் சுந்தரத்திற்கு வந்த ஓலை அவர் கட்சியில் வகிக்கும் இரண்டு பதவிகளில் இருந்து நீக்கம்.

தளவாய் சுந்தரத்திற்கு இயல்பாகவே பாஜக உடன் நல்ல நெருக்கமான நட்பு இருப்பது குமரி மாவட்டத்தில் வெகு காலமாகவே மக்கள் மத்தியில் இருந்த அலசலை, உண்மையாககுவது போன்ற உணர்வை கொடுத்தது.
தலைமக்கழகத்தின் அறிவிப்பை அடுத்து பல ஊடக செய்தியாளர்கள் தோவாளையில் உள்ள வீட்டை இரண்டு நாட்கள் வலம் வந்தும் தளவாய் சுந்தரத்தை சந்திக்கவே முடியவில்லை. லான்ட் போன்,கை பேசி என மாரி,மாரி தொடர்பு கொண்டபோதும் “மணி மட்டுமே ஒலித்து அடங்கும்” எதிர்முனையில் பேசமுடியாது என்ற நிலையே தொடர்ந்தது.
சரஸ்வதி பூஜை நிகழ்வில் கலந்துகொண்டார். விரைவில் செய்தியாளர்களை அவர் சந்திப்பார் என பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது.
திமுகவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பதவி நீக்கம். அதிமுகவில் தளவாய் சுந்தரம் வகித்த இரண்டு பதவிகளில் இருந்து நீக்கம் என்ற செய்திகள் வரிசையில்
குமரியில் மழையின் தாக்கத்தை எதிர் பார்த்து மக்கள் பாதுகாப்பு எண்ணத்தில் இருந்த இன்று(அக்டோபர்_15)ம் நாள் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி மேற்கு மாவட்ட அதிமுகவின் இப்போதைய செயலாளர் ஜான் தங்கத்தை, குமரி கிழக்கு மாவட்டத்தின் தற்காலிக செயலாளராக அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ள அறிக்கையை அடுத்து குமரி கிழக்கு,மேற்கு மாவட்ட அதிமுக-வினர் களிடம் கருத்து கேட்டபோது, தமிழகத்தில் சிறிய மாவட்டமான குமரி இனி அதிமுக வின் ஒரே மாவட்டமாக மாற்றப்படலாம் அல்லது ஏற்கனவே கிழக்கு மாவட்ட செயலாளர்களில் யாராவது ஒருவரை அறிவிக்கும் முன் ஆழம் பார்க்கும் முயற்சியாகவும் இருக்கலாம் என்பதே குமரி அதிமுகவினரின் ஆருடமாக உள்ளது.









