• Fri. Apr 26th, 2024

எஞ்சிய 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அதிமுக கோரிக்கை

ByA.Tamilselvan

May 18, 2022

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி மேலும் எஞ்சியுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் எனவும் – அதிமுக
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது.பேரறிவாளன் மற்றும் ஆறு பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை ஜெயலலிதாவை தொடர்ந்து 2018-ம் ஆண்டில் அவர்களின் வழிநடந்த கழக அரசும் துணிச்சலாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு அடித்தளமாகும்.
பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கம், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. எஞ்சிய 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *