விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 234 தொகுதியிலும் மாவட்ட செயலாளர்கள், மற்றும் மண்டல செயலாளர்களை புதிதாக அறிவித்து வருகின்றார்.

அதனடிப்படையில் முன்னதாக மண்டல செயலாளர் பொறுப்பு வகித்த அன்பானந்தம் என்பவரை மாற்றிவிட்டு, மண்டல துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவரை பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய 6 சட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு மண்டல செயலாளராக நியமித்துள்ளனர்.

இந்த நியமனத்தை தொடர்ந்து ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது; எழுசித் தமிழரின் ஆணைப்படியும், அவருடைய எண்ணத்தின் படியும் இந்த மக்களுக்காகவும், விடுதலை சிறுத்தைகளுக்காகவும்
மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கும் நான் தொடர்ந்து மக்களுக்காக போராடுவேன் என்றும் நீங்கள் எந்த நேரத்தில் என்னை அழைத்தாலும் நான் உங்களுக்காக குரல் எழுப்பி களப்பணி ஆற்றுவேன் என்றும் தெரிவித்துக் கொண்டார்.




