கோவையிலிருந்து உதகைக்கு குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாக
பலத்த பாதுகாப்புடன் சென்றார்.
நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமான மூலம் இன்று காலை 9.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் சாலை மார்க்கமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவை விமான நிலையம், காளப்பட்டி சாலை, அன்னூர் சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் உதகை சாலை ஆகியவற்றிலும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.