• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை அருகே தமராக்கி மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு சிறுமி உயிர் இழப்பு போலீசார் விசாரணை.

ByG.Suresh

Mar 9, 2024

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வன்னிமுத்து. இவரது 13 வயது மூத்த மகள் சுவேதா மற்றும் மற்றொரு மகள் ஒன்பது வயது சிறுமி. இருவரும் நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் வீட்டில் இருந்த பச்சை மரவள்ளிக்கிழங்கை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு வந்துள்ளனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சுவேதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 9 வயது சிறுமி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுவேதாவின் உடல் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.