• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தீபாவளி பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய நபர்..,

ByS. SRIDHAR

Sep 1, 2025

புதுக்கோட்டை அருகே வடசேரிபட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் சிப்காட்டில் இயங்கி வரும் ஸ்கெட்ச் கோல்ட் அடமான கடையில் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் 500 பவுனுக்கு மேல் நகையை அடமானம் வைத்ததாகவும் பல லட்சம் ரூபாய் தீபாவளி பணம் கட்டியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் தற்பொழுது ஓடிவிட்டதாகவும் ,

இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் இழந்து விட்டதாக கண்ணீர் மல்க ஆட்சியர் வாசலில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்களை கைது செய்து நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கையையும் முன் வைத்தனர்.