உசிலம்பட்டி அருகே அண்ணன் இறந்த சோகத்தில் தங்கையும் உயிரிழந்த சோகம் – இறப்பிலும் இணைபிரியாத பாசமலர்களால் இருகிராம உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை., இவர் உசிலம்பட்டி தாலுகா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக இருந்த இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இறப்பு செய்தியை அறிந்து அவரது உடலை பார்க்க வந்த இவரது தங்கையான நக்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர் அண்ணனின் உடலை கட்டி அனைத்து அழுத போது அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்., அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த சூழலில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.,
இந்நிலையில் 40 ஆண்டு காலம் ஒன்றாக இணைந்து இருந்த பாசமிகு அண்ணன் இறந்த உடனே, தங்கையும் அவரது மடியில் உயிரை விட்ட சம்பவம் இரண்டு கிராமத்தின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,