• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தேமுதிக இடம் பெறும் அணியே தமிழகத்தில் ஆட்சி..,

ByT. Balasubramaniyam

Aug 19, 2025

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக இடம் பெறும் அணியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அரியலூர் பேருந்து நிலையம் முன்பு நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தின் போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் பிரச்சாரத்தை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அரியலூர் சத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ மற்றும் வாகனத்தில் நின்றவாறும் பொது மக்கள் சந்தித்தார். தொடர்ந்து, பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே அவர் பேசியது. அரியலூரில் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்துவரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். அரியலூர் நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும். இல்லையெனில், தேமுதிக வலுவான கூட்டணியை, அமைத்து வரும் சட்டமன்றதேர்தலில் மாபெரும் வெற்றிபெறும். அப்போது, ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட அனைத்து பணிகளையும் செய்வோம். மேலும், அரியலூரில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இங்குள்ள சிமென்ட் ஆலைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்னுரிமைக்கு வலியுறுத்தப்படும். எனவே, தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து,கீழப்பழுவூர், ஏலாக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநில தேமுதிக பொருளாளர் எல் கே சுதீஷ், மாவட்டச் செயலாளர்கள் அரியலூர் இராம.ஜெயவேல்,பெரம்பலூர் அய்யப்பன், மண்டல தேமுதிக பொறுப்பாளர் சுபா இரவி, மாநில தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஏ.ஞானபண்டிதன், அரியலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எம். ஆனந்தன், மாவட்ட அவைத்தலைவர் கே எஸ் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் ஏ சக்திவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தேன்மொழி சம்பந்தம்,புல்லட் ரவி, விபிஎல் பாண்டியன்,தெய்வசிகாமணி, கழக பேச்சாளர் ஆர் முத்தமிழ்செல்வன்,பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் கருப்பையா,இளங்கோவன், மோகன்தாஸ்,முத்தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பின ஜேக்கப் ,நகர செயலாளர்கள் தாமஸ் ஏசுதாஸ், சின்னபாண்டு உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கட்சி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.