• Sun. Sep 8th, 2024

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி டிஸ்மிஸ்

ByA.Tamilselvan

May 9, 2023

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் கைது செய்த அதிகாரி டிஸ்மிஸ்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2022-ம் ஆண்டு மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் ஆர்யன் கான் மற்றும் 5 பேர் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆர்யன் கான் வழக்கில் பிரத்யேக ஆர்வம் காட்டியதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்தும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆர்யன் கானை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட ரெய்டில் போலீஸ் அதிகாரி விஷ்வ விஜய் சிங்கும் இடம் பெற்று இருந்தார்.ஏற்கனவே ஆர்யன் கான் வழக்கு விசாரணையில் இருந்து விஷ்வ விஜய் சிங் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
அதோடு கடந்த ஏப்ரல் மாதம் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் விஷ்வ விஜய் சிங் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். ஆர்யன் கான் வழக்கில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டவில்லை.
வேறு ஒருவழக்கு தொடர்பாக சிங் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதனை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சத்ய நாராயண் பிரதான் உறுதிபடுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *