அண்மையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட தலைவர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக விஜய்குமார், வடக்கு மாவட்ட தலைவராக ரங்கராஜன், தெற்கு மாவட்ட தலைவராக சக்திவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மூவரும் பொறுப்பேற்று கொண்டனர்.

பொறுப்பேற்று கொண்ட மூவருக்கும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் மூன்று பேரும் தங்கள் பணியை சிறப்பாக செய்வோம் என தெரிவித்து காங்கிரஸ் தலைமைக்கும் மூத்த தலைவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.