செங்கல்பட்டு மாவட்டம் தலைமை மருத்துவமனை 110 கோடி செலவில் தாம்பரம் சானடோரியத்தில் கட்டப்பட்டுள்ளது

இந்த மருத்துவமனையை வருகின்ற ஐந்தாம் தேதி தமிழக முதலமைச்சர் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்தார்
தாம்பரம் சானடோரியத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை பணிகளை அவர் ஆய்வு செய்தார் தமிழக குரு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ.அன்பரசன் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். ஆர் ராஜா, இ. கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

மருத்துவமனை வளாகத்தை சுற்றி பார்த்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிற ஐந்தாம் தேதி செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் என்றும் தமிழக முதலமைச்சர் விழாவில் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைப்பதாக தெரிவித்தார்.
அதே நிகழ்ச்சியில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள பல் மருத்துவமனை ஆய்வுக்கூடம் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டு கட்டிடங்கள் ஆகியவற்றையும் தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்தார்.