கோவையில் உள்ள ஜிடி அருங்காட்சியகத்தில் பிரத்தியேகமான அதிநவீன கார்கள் அடங்கிய பிரிவை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வை சர்வதேச வரலாற்று வாகனங்களின் கூட்டமைப்பான FIVA வின் துணைத் தலைவர் ராமின் சல்லேகு, கல்வியியலாளர் கிருஷ்ணராஜ் வானவராயர் ஜிடி நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜ்குமார் ஆகியோரின் இந்த நிகழ்வை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிடி நாயுடு பற்றி அவரது தாத்தா, அப்பா மற்றும் குடும்பத்தினர் கூறியதையும் ஜிடி நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பற்றி கூறியதையும் நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கோவையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த அருங்காட்சியகம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மோட்டார் விளையாட்டு துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து பழங்கால கார்கள் வைக்கப்பட்டுள்ள காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெரியார் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் பார்வையிட்டு சிறிது நேரம் அமர்ந்து ரசித்தார். பேருந்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் , மற்றும் ஜிடி நாயுடுவின் பேரன் ராஜ்குமார் ஆகியோர் சிறிது நேரம் பேருந்துக்குள் அமர்ந்திருந்து பேருந்தில் உள்ள வசதிகள் பற்றி உரையாடிக் கொண்டனர்.