பல்வேறு முடித்து வைக்கப்பட்ட பணிகளை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில் , புதிய காவல் நிலையங்களையும் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிலையில் , மதுரை மாநகர் பகுதிக்குட்பட்ட மாடக்குளம் பகுதியில் அமையப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் திறந்து வைத்தார்.

புதிய காவல் நிலையத் திறப்பு விழாவை முன்னிட்டு மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த மரியாதைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வருகை தந்து ஆணையாளர் மற்றும் ஆய்வாளருக்கு சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்த புதிய காவல் நிலையம்,
சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் புதிய காவல் நிலையங்களை திறந்து வைத்த நிலையில் , மாடக்குளம் பகுதிக்கான காவல் நிலையத்தை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் நேரில் வருகை தந்து ரிப்பன் வெட்டி குத்து விளக்கு தொடங்கி வைத்தார்.

மதுரை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மடக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டவர்களுக்கு மாடக்குளம் சார்பில் மரியாதைதாரர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேரில் வருகை தந்து சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்தனர்.




