மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வடக்கு வெளி வீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் மரியாதை செய்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன், உதவி தலைமை ஆசிரியர் அகிலாண்டேஸ்வரர், நேதாஜி தேசிய இயக்க தலைவர் சுவாமிநாதன், மாற்றம் தேடி அறக்கட்டளை தலைவர் பாலமுருகன், சமூக ஆர்வலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





