• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்..,

ByKalamegam Viswanathan

Mar 15, 2026

மதுரை, மாவட்டம் பாலமேடு முதல்நிலை பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு பணம் வசூலிக்க வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த வார சந்தைக்கான ஏலம் பாலமேட்டை சேர்ந்த குணசேகரன் (47) என்பவர் 21 லட்சத்து 66 ஆயிரத்து 35 ரூபாய்க்கு ஏலம் எடுத்ததுடன், கடையை கடந்த 11 மாதமாக நடத்தி வந்துள்ளார்.

மேலும் வாரச்சந்தை நடைபெறும் கடைகளை சாலையில் போட எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்ததாரர் குணசேகரன் சாலையில் வாரச்சந்தை கடை போட அனுமதிக்க வேண்டும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

ஆனால் பேரூராட்சி நிர்வாகமோ . அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர இயலாது என்றும்,

சந்தைக்கு மறு ஏலம் விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது இதனைத் தொடர்ந்து வாரச்சந்தை. ஏலம் எடுப்பதற்கு பலர் பாலமேடு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில்,

திடீரென பழைய ஒப்பந்த தாரர் குணசேகரன்

ஏற்கனவே 21 லட்சத்துக்கு வாரச்சந்தை ஏலம் எடுத்து நஷ்டம் ஏற்பட்டதால் தனக்கே மறுபடியும் வாரச்சந்தையை கொடுக்க வேண்டும் இல்லையென்றால்
என்னிடம் லஞ்சப்பணமாக வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், துணை தலைவர் என மூவரும் சேர்ந்து ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பி தந்து விட்டு பொது ஏலத்தை நடத்த வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார்.

ஆனால் அவரை அலுவலக ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல் வெளியே போகச் சொல்லி போலீசாரை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த குணசேகரன் தன்னிடம் பெற்ற 3.50 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி தர வேண்டும் இல்லையென்றால் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டேன் என தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பேரூராட்சியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் தன்னை காவல்துறையின் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். அதனால் ஏலக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செயல் அலுவலருக்கு 50 ஆயிரம், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் என மொத்தம் 3.50 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாகவும் ஒப்பந்ததாரர் குணசேகரன் கூறிய நிலையில் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரணை செய்து பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் லஞ்சப்பனம் பெற்றது. உண்மையாக உண்மையாகும் பட்சத்தில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தலைவர் துணைத் தலைவர் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோல் பேரூராட்சியில் நடைபெறும் மற்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் என பாலமேடு பேரூராட்சிக்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.