• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சுந்தர விநாயகர் ஆலயங்களின் மகா கும்பாபிஷகம்..,

ByR. Vijay

Jul 7, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழக்காவலக்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

கும்பாபிஷகம் விழா கடந்த 4 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சகவ்ய பூஜை, கோ பூஜை, லெஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனத்தோடு முதல்கால யாக சாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜையோடு பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்று வந்தது. இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை காண்பிக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது.

சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் ஒலிக்க ஆலய கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷகம் நடைப்பெற்றது. தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை நடைப்பெற்றது.

முன்னதாக சுந்தர விதாயகர் ஆலயத்திற்கும் மகா கும்பாபிஷகம் நடைப்பெற்று சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.