நாகர்கோவிலில் அமித்ஷாவை கண்டித்து, தி மு. க., தலித் இயக்கம்
ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தினர்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்காரை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆனா மகேஷ் தலைமையில் கண்டன ஊர்வலமாக வந்தனர். இதில் திமுகவின் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில் முன் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் பின் அம்பேத்காரை அவமானம் படுத்தி பேசிய அமித்ஷாவை கண்டித்து கண்டன கோசம் எழுப்பினார்கள்.

நாகர்கோவிலில் மற்றொரு இடத்தில் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை பாடை கட்டி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் போராட்டம் நடத்தினர்.

மாநிலங்களவையில் பாபாசாகேப் பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் விதமாக பேசியதோடு தொடர்ச்சியாக அம்பேத்கரை இழிவுபடுத்திவரும் ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை பாடையில் கட்டி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் அமித்ஷா பதவி விலக கோரியும் உடனடியாக அமித்ஷாவை கைது செய்ய கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டத்தில் அமித்ஷா பாடையை தரையில் கட்டி இழுத்து வந்து கோஷங்கள் எழுப்பியதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
