பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் “அன்பு கரங்கள்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் இன்று தொடங்கி வைத்தார்.

வறுமையின் காரணமாக பள்ளி கல்வியைத் தொடர முடியாத குடும்பங்களுக்கு உதவியாக மாதம் ரூ.2000 வரையிலான நிதியுதவி வழங்கப்படும் அன்பு கரங்கள் திட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த தாய் தந்தையரை இழந்த 110 குழந்தைகள் பயனடைய உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 110 குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.