தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இன்று மாலை குதிரை வண்டி பந்தயமும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்ததோடு பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி விட்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்ற போது சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.


பந்தயத்திற்கு அந்த வண்டிகள் சென்ற பிறகு அதன் பின்னால் ஒரு குதிரை வண்டியை கொண்டு வந்து நிறுத்தி வைத்து அதன் மீது புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஏறி குதிரை வண்டியை தானே ஓட்டினார். சட்டமன்ற உறுப்பினர் குதிரை வண்டி ஓட்டிய நிகழ்வை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையின் இரவு பக்கமும் நின்று கைதட்டி வேடிக்கை பார்த்து ரசித்தனர்.




