• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு புதிய நூல்கள் வெளியீட்டு விழா..,

BySeenu

Mar 15, 2026

கோவையில் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நான்கு புதிய நூல்கள் வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர் வி ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் வெற்றி முழக்கம், வெற்றியின் ஓசை, துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நூல்களை பகுப்பாய்வு செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த. விஸ்வநாதன் எழுதிய பன்முக ஆய்வு கட்டுரைகள் என நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கே கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை, பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், முதல்வர், முனைவர் க. முருகேசன் அவர்கள் வரவேற்றார்.முதல் பிரதியை கோவை, பாரதியார் பல்கலைக்கழக, பதிவாளர், முனைவர் ஆர். ராஜவேல் அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.முதல் பிரதியை கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், முதல்வர் மற்றும் செயலாளர், முனைவர் பி. எல். சிவகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வெற்றியின் ஓசை, வெற்றி முழக்கம், துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் பன்முக ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றின் நூல் அறிமுக உரையை முறையே கோவை, மேட்டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின், தமிழாசிரியர், முனைவர் ஜி. கருணாநிதி, கோவை, கவிஞர் மீ. உமா மகேஸ்வரி, பொள்ளாச்சி, இலக்கிய வட்டம், செயலாளர், கவிஞர் இரா. பூபாலன் மற்றும் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த. விஸ்வநாதன் ஆகியோர் வாசித்தனர்.இதுவரை சிந்தனை கவிஞர் கவிதாசன் அவர்கள் 90க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குனரும், புத்தகம் ஆசிரியருமான சிந்தனை கவிஞர் கவிதாசன் அவர்கள் ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.