• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தின் நிலப்பரப்பின் கடைசி பகுதி குமரி முனை, ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி…

தமிழக அரசு அண்மையில் ரு.38 கோடி திட்டத்தில் கட்டி முடித்து. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கடல் பாலம். இந்தியாவின் அனைத்து மாநில சுற்றுலா பயணிகளை மட்டும் அல்ல, சர்வதேச சுற்றுலா பயணிகளையும் அதிகம் ஈர்ப்பதில் முதல் இடத்தில் உள்ளது.

தமிழக அரசு வரவு சிலவு திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஒரு முக்கிய திருப்பமாக “ரூ”வரவு செலவு திட்டத்திற்கு புதிய இலக்கணத்தை ஏற்படுத்தி, ஒன்றிய ஆட்சியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. தமிழகம் கடந்த இந்தியாவின் எட்டு திக்குகளிலும் டிரெண்ட் ஆகி பரவியது.
தமிழகத்தின் புதிய வரவு சிலவு திட்டத்தின் சிகரமாக. திருக்குறள் மேலும் 45மொழிகளில் வெளிவரவிருப்பது.

தமிழக வரவு செலவு திட்டத்தில் கன்னியாகுமரிக்கென்றே திருவள்ளுவர் சிலை,கண்ணாடி இழைப்பாலம்,சின்ன முட்டம் துறைமுகத்தை இரண்டாவது முனையகமாக கொண்டு ரூ.2722 கோடியில் திருவள்ளுவர் சிலை வரை சுற்றுலா பயணிகள் படகுகள் இயக்கவிருக்கிறது.

கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் தேவையை நிறைவு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டவுள்ளது. மீன் இயங்குதளம், மீன்பிடி வலைகள் பின்னுதல்,உள் கட்டமைப்பு வசதிகள் செய்ய. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்ட வரவு செலவு திட்டம் வழி வகுக்கிறது.

குமரி கடலில் வான் உயர் திருவள்ளுவர் சிலை,கண்ணாடிப் பாலம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் எத்தகைய வரவேற்பை சுற்றுலா மக்களிடம் பெற்றுள்ளதோ,அதை போன்று மக்களை ஈர்க்கும் பகுதிகளாக. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மற்றும் கல்விக் கண் திறந்த காமராஜர் நினைவு மண்டபம் எல்லாம் நீண்ட காலமாக இருந்தாலும்.

குமரி ஆட்சியர் அழகு மீனாவின் சிந்தனையில் உருவான. காந்தி மற்றும் காமராஜ் மண்டபத்திற்கு இடைப்பட்ட இடத்தில். தேச தந்தையும், கல்வி கூடங்களை உருவாக்கிய பெரும் தலைவர் காமராஜர் சிலை இருவர் இடையே ஒரு உரையாடல் நடப்பது போன்ற சிந்தனையை உலக சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏற்படுத்திவிடுகிறது.