• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

“ராஜாவின் இசை ராஜாங்கம்” இன்னிசை நிகழ்ச்சி..,

ByAnandakumar

Apr 16, 2025

கரூரில் வருகின்ற மே 1ம் தேதி இசைஞானி இளையராஜாவின் “ராஜாவின் இசை ராஜாங்கம்” என்ற நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி அருகே சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 35,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் மிகப்பெரிய அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

இசைஞானி இளையராஜா சிம்பொனியை முடித்துவிட்டு முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் பங்கேற்குக் மிகப்பெரிய இன்னிசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகர் மனோ, ஸ்வேதா மோகன், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்பட பின்னணி பாடகர்களும், 100 இன்னிசை குழுவினரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இன்று துவக்க விழா பூமி பூஜை நடைபெற்றது. இதில் கோகுல் இவன் நிர்வாக இயக்குனர் அஜித் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அஜித் ராஜா,

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை 500 ரூபாய் முதல் ஆன்லைன் வழியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது தற்போது வரை 10000-க்கும் மேலான டிக்கெடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை பொதுமக்களிடம் அதிகம் கொண்டு சேர்க்க பேருந்து ஆட்டோ கால் டாக்ஸி லாரி ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 250 ரூபாய் என்ற சலுகை விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

மே 1ஆம் தேதி நடக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி மாலை 6:30 மணி அளவில் இருந்து 11 மணி வரை நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜித் ராஜா தெரிவித்தார்.