பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்று தமிழக முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு கிரேன் மூலம் ராட்சச மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
பின்னர் பிரச்சார கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன்
எல்லா இடங்களிலும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது அதை கேட்க செல்லும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடக்கின்றது எங்கு பார்த்தாலும் லஞ்சம் லாவண்யம்
கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என எங்கு பார்த்தாலும் லஞ்சம் பெறப்பட்டு மோசமான ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது
இந்தப் பகுதிகளில் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுவதற்கு வைகை அணை 58 ஆம் கால்வாயை இதுவரை திறக்கப்படவில்லை அதைப்பற்றி எல்லாம் அரசுக்கு அக்கறை கிடையாது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டும்தான் இருக்கின்றது
தமிழகத்தில் எந்த கிராமங்களுக்கு சென்றாலும் கஞ்சா புழக்கம் உள்ளது அதைப்பற்றி எந்தவித கவலையும் இல்லாத மோசமான அரசாக திமுக அரசு உள்ளது

காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற 14 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நிலையில் காவல் நிலையம் மோசமாக உள்ளது தமிழகத்தில் பாலியல் பலாத்காரங்கள் கொலைகள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது
கரூர் பிரச்சார கூட்டத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் 12 மணிக்கு வருகிறேன் எனக்கூறி இரவு 7 மணிக்கு சென்றார் அங்கு முன்னாள் அமைச்சரின் தூண்டுதலின் பேரில் கரூரில் உயிரிழப்பு ஏற்பட்டது என செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் பேசினார்
திமுக கூட்டம் நடைபெற்றால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை அதிகம் நடக்கும் ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி நடைபெற்றால் டாஸ்மாக் கடையில் விற்பனை இருக்காது என தெரிவித்தார்.








